வடலூரில் கர்ப்பிணிப் பெண் திடீர் சாவு
- வடலூரில் கர்ப்பிணிப் பெண் திடீரென ஏற்பட்ட வயிற்றுவலியால் உயிர் இழந்தார்.
- அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.
கடலூர்:
வடலூர் அருகே அரங்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சனி (வயது 29) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தற்போது ரஞ்சனி 8 மாத கர்ப்பிணி ஆக இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சனிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இந்த வயிற்று வலியால் அலறி துடித்தார். இதை வீட்டின் அருகில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு வடலூரில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரஞ்சினியும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் பரிதாபமாக இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இது குறித்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.