உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

திருப்பூரில் நாளை தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

Published On 2022-06-09 08:55 GMT   |   Update On 2022-06-09 08:55 GMT
  • நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
  • எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள், தையல் பயிற்சி பெற்றவா்களும் பங்கேற்கலாம்.

திருப்பூர்,

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை 10-ந்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் வேலைதேடும் நபா்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் முகாமில் பங்கேற்கலாம். இதில் எழுதப் படிக்கத் தெரிந்தவா்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள், தையல் பயிற்சி பெற்றவா்களும் பங்கேற்கலாம்.

மேலும், வேலைவாய்ப்பு பதிவு அலுவலக பதிவில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதனை சரிசெய்து கொள்வதுடன், கூடுதல் கல்வியை பதிவு செய்து கொள்ளலாம். தகுதியிருந்தால் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பொறவும் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2999152, 94990-55944 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம். தனியாா் துறைகளில் வேலையில் சோ்வதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News