வினாடி-வினா போட்டி நாகை இலக்கியா மழலையர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
- போட்டியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டியின் இறுதிச்சுற்று நாகை இலக்கியா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.ஆரிப் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு நாகை வருவாய் வட்டாட்சியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.நாகை அஸ்பெயர் அகாடமி நிர்வாக இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார்.
இதில் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ராஜு, இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரி பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். போட்டியில்15 பள்ளிகளில் இருந்து 147 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி ஹர்னிதா முதலிடம், தேவூர் குழந்தை இயேசு உயர்நிலைப்பள்ளி மாணவி வர்ஷினி 2-ம் இடம், நாகை அமிர்தா வித்யாலயா பள்ளி மாணவி சௌசிதா 3-ம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி யானது திருமருகல் ஒன்றிய கிளை ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது.