உள்ளூர் செய்திகள்

பயளானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தீபக்ஜேக்கப் வழங்கினார்.

184 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

Published On 2023-09-30 09:55 GMT   |   Update On 2023-09-30 09:55 GMT
  • ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.
  • மொத்தமாக 125 மனுக்கள் பெறப்பட்டது.

மதுக்கூர்:

மதுக்கூர் அருகே உள்ள சொக்கனாவூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, அண்ணாதுரை எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பெரியகோட்டை சரகத்திற்கு உட்பட்ட சொக்கனாவூர், புளியக்குடி கிராமங்களுக்கு ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், கல்வி கடன், உள்ளிட்ட 125 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து அவர் வருவாய்த்துறை மூலம் விலையில்லா வீட்டு மனை பட்டா 110 நபர்கள், 10 நபர்களுக்கு பட்டா மாறுதலும், சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், விதவைகள், ஈமச்சடங்கு உதவித்தொகைகள் 49 நபர்களுக்கும் என மொத்தம் 184 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சத்து 78 ஆயிரத்து 290 மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ (பொ) வாசுதேவன், தாசில்தார் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜு, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள்

இளங்கோ, கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பழனிவேல், மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News