சேதடைந்த சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் சாலைகள் மிகவும் மோசாக உள்ளது.
- போர்கால அடிப்படையில் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றியம் மகேந்திரப்பள்ளி ஊராட்சி க்கு உட்பட்ட பல்வேறு சாலைகளை சேதமடைந்துள்ளதால் அதனை சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அனுப்ப பட்டுள்ளது. இது குறித்து மகேந்திரப்பள்ளி ஊராட்சி பெரிய தெருவை சேர்ந்த வழக்கறிஞர் அம்சேந்திரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் ஒன்றியம் மகே ந்திரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியதெரு செல்லும் சாலை, தோப்புமேடு முதல் காளியம்மன் கோவில் வரை உள்ள சாலை, காக்கா முக்கூட்டு சாலை குருமாங்கோட்டகம் சாலை,மகேந்திரப்பள்ளி ஊராட்சி,காட்டூர் ஊராட்சி மக்கள் மயானத்திற்கு செல்லும் சாலை ஆகிய சாலைகள் முழுவதுமாக மோசமான நிலையில் பொதுமக்கள் சென்றுவர முடியாத நிலையில் உள்ளது. ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி போர்கால அடிப்படையில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.