உள்ளூர் செய்திகள்

தாலிநத்தம் அரசு நடுநிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியது.

பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-07-13 13:25 IST   |   Update On 2023-07-13 13:25:00 IST
  • தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.
  • மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அப்பகுதிகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் வகுப்பறையில் மேல் பகுதி பக்கவாட்டு சுவர்களில விரிசல்களில் லேசான மழைக்குக்கூட தாக்கு பிடிக்காமல் பழுதடைந்த கட்டிடம் உள்ளது.

இந்த நிலையில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. தற்போது வகுப்பறையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.

இதனால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இவற்றை முறையாக சீர் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முறை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கல்வி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள கிராமபகுதி மாணவ, மாணவியர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News