உள்ளூர் செய்திகள்

நவீன லேப் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-09-27 15:25 IST   |   Update On 2023-09-27 15:25:00 IST
  • கடத்துர் அருகே ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன லேப் கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.

தருமபுரி மாவட்டம், கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட கடத்தூர் மற்றும் பாப்பிரெட்ப்பட்டி தாலுகாவில் உள்ள மக்கள் மேல் சிகிக்சை பயன்பெறும் வகையில் 15-வது நிதி ஆணையம் 2021 - 2022 ஆண்டு திட்டம் மூலம் கடத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் நவின லேப் கட்டிடம் கட்டப்பட்டது.

இந்நிலையில் இது கட்டப்பட்டு பல மாதங்களான நிலையில் அதற்கான அறிவியல் உபகரணங்கள் இன்று வரை வராத நிலையிலும், மின்இணைப்பு முறையாக கொடுக்கப்படாமலும் இருந்து வருகின்றது.

மருத்துவத்துறை மக்க ளுக்கான தேவைகளை நிவர்த்தி செய்து வருவதாக கூறிவரும் நிலையில் இந்த லேப் கட்டிடம் முறையாக இயங்கவும், உபகரணங்கள் வழங்கப்படாமல் உள்ளது.

பல ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் விதமாக கட்டப்பட்ட லேப் செயல்படும் வகையில் தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News