உள்ளூர் செய்திகள்
ஆலங்குடியில் மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம்
- ஆலங்குடியில் மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்
- சரத்குமார் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஆலங்குடி மின்வாரிய அலுவலக ஊழியரான இவர், கீழாத்தூர் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலங்குடி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்த கணேசனை, பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.