உள்ளூர் செய்திகள்
விராலிமலை முருகன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி
- விராலிமலை முருகன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- நவராத்திரி நிறைவு நாளையொட்டி நடந்தது
புதுக்கோட்டை
விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற வந்தது. தினமும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு நேற்று முருகபெருமாள் சமேத வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புஎய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.