உள்ளூர் செய்திகள்

ஆலங்குடியில் விவசாய மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-06-19 15:01 IST   |   Update On 2022-06-19 15:01:00 IST
  • மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலையம் அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
  • இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், அவரவர்க்குரிய பிரச்சனைகளை முகாமிற்கு வருகை தந்து தெரிவித்து பயன் பெறலாம்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலையம் அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும், அவரவர்க்குரிய பிரச்சனைகளை முகாமிற்கு வருகை தந்து தெரிவித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News