உள்ளூர் செய்திகள்
பொன்னமராவதியில் நீதிமன்ற கட்டிடம் திறப்பு
- பொன்னமராவதியில் நீதிமன்ற கட்டிடம் திறக்கபட்டுள்ளது
- நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்
பொன்னமராவதி
பொன்னமராவதியில் நீதிமன்றம் அமைக்க பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வந்தது. இதன் காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வந்தார். இதனை தொடர்ந்து பொன்னமராவதி மாவட்ட உரிமையியல் நீதிமன்ற தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றத்தை பேரூராட்சித்தலைவர் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், வட்டாட்சியர் பிரகாஷ், வார்டு உறுப்பினர் ராமநாதன், வழக்கறிஞர்கள் குமார், ராதா கிருஷ்ணன், சிரிதர் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்றனர்.