கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்களின் விபரங்களை அறிய கியூஆர்கோடு வசதி
- மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
- மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது .
கொடைக்கானல்:
கொடைக்கானல் உலகளாவிய முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு இடங்கள், பொழுது போக்கு அம்சங்கள் இருந்து வருகிறது.
இதில் கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா சுற்றுலா பயணிகளை கவருவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது . தற்போது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான பல லட்சம் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில் மலர் கண்காட்சிக்காக பேன்சி , டெல்பினியம், மேரி கோல்ட் , கேலண்டுல்லா, சால்வியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் பூத்துக் குலுங்குகிறது.
இந்நிலையில் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மலர்களின் பெயர்களை கண்டறிய கியூ ஆர் கோடு அந்தந்த மலர்களின் பெயர் பலகைகளில் ஒட்டப்பட்டு ள்ளது . இதனை சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் ஸ்கேன் செய்வதன் மூலமாக பூக்களின் விபரங்கள் மற்றும் அதன் குடும்ப வகைகள், எந்த சமயங்களில் இவை பூக்கும் என்பது உள்ளிட்ட முழு விபரமும் அறிந்து கொள்ளும் வகை யில் தயார் செய்யப்பட்டு ள்ளது.
இதன் மூலம் சுற்றுலா பயணிகள் எளிதாக பூக்களின் பெயர்களை கண்டறியலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.