உள்ளூர் செய்திகள்

அரியநாதபுரம் கிராமத்தில் மழையால் சேதமடைந்த வீட்டையும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் படத்தில் காணலாம். 

மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Published On 2022-10-18 06:56 GMT   |   Update On 2022-10-18 06:56 GMT
  • ஆப்பனூர் ஊராட்சியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
  • அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் ஊராட்சி அரியநாதபுரம் கிராமத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஆப்பனூர் ஊராட்சி அரியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி, சக்தி வேல், மகேஸ்வரி, கருப்பசாமி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மழையால் இடிந்து சேதமாகியுள்ளது.

அதன் உரிமையாளர்கள் கூறும்போது, கனமழை காரணமாக வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது. இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் எங்கள் கிராமத்திற்கு வரவில்லை. நாங்கள் குழந்தைகளுடன் தங்க இடமின்றி அவதிப்பட்டு வருகிறோம். அடுத்த மழை பெய்தால் ஒதுங்குவதற்கு இடம் இல்லாமல் வீட்டிற்கு வெளியே தங்கி வருகிறோம்.

அரசு அதிகாரிகள் எங்கள் கிராமத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு இடிந்த வீடுகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News