உள்ளூர் செய்திகள்

கர்ணமுருகன்- மீனா ஆகிேயாரது திருமணம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் நடைபெற்றபோது எடுத்த படம்.

தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.ஆறுமுகம் இல்ல திருமண விழா

Published On 2023-10-25 13:57 IST   |   Update On 2023-10-25 13:57:00 IST
  • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.ஆறுமுகம் இல்ல திருமண விழா நடந்தது.
  • தொழிலதிபர் மனோகரன், சேர்மன் கே.டி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

ராமநாதபுரம்

திருச்சி மாவட்டம், கீரம்பூர் எஸ்.பன்னீர்-சண்முகவள்ளி ஆகியோர் மகன் சிங்கப்பூரில் வசிக்கும் டி.எம்.இ பட்டதாரி

ப.கர்ணமுருகனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் வடக்கு யாதவர் தெருவில் வசித்து வரும் தி.மு.க ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் எம்.பி.ஆறுமுகம், தி.மு.க. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய துணைச் செய லாளர் ஆ.மேனகா தம்பதி யினரின் மகள் பி.எஸ்.சி பட்டதாரி ஆ.மீனா (எ) ஐஸ்ஸிற்கும் பெரியோர்க ளால் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு இருந்தது.

இவர்களது திருமணம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. இத்திருமணத்திற்கு ராம நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவ ருமான கே.டி.பிரபாகரன், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான வேலு மனோகரன் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.

ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜவேணி பார்த்தசாரதி,உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,பேராவூர் வடக்கு யாதவர் தெரு முதியோர் சங்கம்,மாவீரன் அழகு முத்துக்கோன் இளை ஞர் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Tags:    

Similar News