உள்ளூர் செய்திகள்

கருப்பு பேட்ஜ் அணிந்து கல்வி பயிலும் மாணவர்கள்

கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள்

Published On 2023-01-20 09:45 GMT   |   Update On 2023-01-20 09:45 GMT
  • கடலாடி அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
  • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே 42 ஆண்டு பழமையான அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அது தற்போது சேதமடைந்த நலையில் உள்ளது.

இதனால் மாணவ- மாணவிகள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்களுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். வகுப்பறையில் கருப்பு பேஜ் அணிந்து பாடங்களை கற்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிரா மத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடம் என்பதால் சேதமடைந்துள்ளது. எனவே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

பல முறை ேகாரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இவர்கள் போராட்டத்துக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News