உள்ளூர் செய்திகள்

குலசை தசரா பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் அரசு பஸ் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் - முதல்-அமைச்சருக்கு கோரிக்கை

Published On 2023-09-05 09:02 GMT   |   Update On 2023-09-05 09:02 GMT
  • தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
  • எனவே பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

உடன்குடி:

குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரி கள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்குஅனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு உவரி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு குளிர்சாதன பஸ் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் பக்தர்களை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர், இந்த பஸ்சில் தசரா பக்த ர்கள் ஏராளமானவர்கள் தினசரி வந்து செல்கின்றனர். சுற்றுப்புற கிராம மக்கள்மற்றும் பயணிகள் வசதிக்காக இந்த அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Tags:    

Similar News