உள்ளூர் செய்திகள்
- ரோந்து பணியின் போது சிக்கினார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
நெமிலி அருகேயுள்ள நெல்லிக்குப்பம், சயனபுரம், ஆட்டுப்பாக்கம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நெமிலி சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆட்டுப்பாக்கம் பத்ரகாளி அம்மன் கோவிலின் பின்புறம் செல்லும்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட முயன்றார்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வீட்டின் பின்புறம் மறைவான பகுதியில் பிளாஸ்டிக் கவர்களில் மொத்தம் 10 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் இவர் நெமிலி அடுத்த சயனபுரம், பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 54) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.