உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2023-09-25 15:01 IST   |   Update On 2023-09-25 15:01:00 IST
  • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்
  • 6 வருடங்களாக காதலித்து வந்தனர்

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த மானாமதுரை கிராமத்தில் வசித்து வரும் ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன்(28).எம்.காம் படித்துவிட்டு தற்போது தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவரும் காஞ்சிபுரம் மாவட்டம், வேளியூர் கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டன் மகள் சாந்தி(23) என்பவரும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் தங்கள் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் நேற்று நெமிலி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்தனர். தொடர்ந்து நெமிலி போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News