உள்ளூர் செய்திகள்

ஆதார் அட்டைக்காக பள்ளி மாணவிகள் காத்திருப்பு

Published On 2023-11-09 09:10 GMT   |   Update On 2023-11-09 09:10 GMT
  • கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும்
  • கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க வலியுறுத்தல்

காவேரிப்பாக்கம்:

நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்க வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2 நாட்களாக பள்ளி படிக்கும் மாணவ, மாணவிகள் புதிய ஆதார் அட்டை பெற பள்ளி செல்லாமல் விடுப்பு எடுத்து நெமிலி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வந்து காத்து கிடந்தனர்.

மேலும் ஆதார் அட்டை விண்ணப்பிக்க முடியாமல் பல மாணவ மாணவிகள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதனால் விரக்தியடைந்த பெற்றோர்கள் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் இ-சேவை மையங்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர்.

Tags:    

Similar News