உள்ளூர் செய்திகள்

பஸ்சை சிறை பிடித்து ஈடுபட்ட பொதுமக்கள்.

ஊராட்சி மன்ற கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்

Published On 2023-02-17 15:30 IST   |   Update On 2023-02-17 15:30:00 IST
  • 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
  • பயணிகள் கடும் அவதி

நெமிலி:

பாணாவரம் அடுத்த தப்பூர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டிடம் பழுதானதால் அதனை கோவிந்தாங்கள் பகுதியில் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த தப்பூர் கிராம மக்கள் வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து ஆயில் அன்வர்திக்கான் பேட்டைசாலையில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது ஊராட்சி மன்ற கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் சாலை மறியலில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர். இந்த மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால் வாகன ஓட்டிகள் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News