உள்ளூர் செய்திகள்

கொங்கணாபுரம் அருகே டேனீஸ்பேட்டை கட்டிடத் தொழிலாளி மர்ம சாவு

Published On 2023-06-06 12:54 IST   |   Update On 2023-06-06 12:54:00 IST
  • காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.
  • இதை கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

எடப்பாடி:

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரம், இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவர் அதே பகுதியில் இறந்து கிடந்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து கொங்கணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சாலையோரம் இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், இறந்து கிடந்த நபர் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 40) என்பதும், கட்டிடத் தொழிலாளியான இவர், ஈரோடு பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசார், ஈரோட்டில் தங்கி பணிபுரிந்து வந்த கட்டிட தொழிலாளி வெள்ளையன் எதற்காக இப்பகுதிக்கு வந்தார்? மேலும் சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த அவர், திடீரென மர்மமாக இறந்து கிடந்தது எப்படி? அவரை யாரும் கடத்தி வந்து தாக்கி கொலை செய்தனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News