சேலத்தில் வருகிற 21-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம்
- ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
- தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
நாமக்கல்:
கர்நாடக அரசை கண்டித்து வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல்லில் அதன் மாநில தலைவர் வேலுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கான காவிரி பங்கீட்டு நீரை வழங்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் டெல்டா பகுதிகள் நீரின்றி பாலைவனமாகும் சூழல் உருவாகியுள்ளது. உரிய நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து சேலம் ஜங்ஷன் வழியாக கர்நாடகத்திற்கு செல்லும் ரெயில்களை மறித்து வருகிற சனிக்கிழமை காலை 11 மணியளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இதில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திரளாக பங்கேற்க உள்ளனர். டெல்டா பாசன விவசாயிகளும், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.