உள்ளூர் செய்திகள்
சேலத்தில் கடும் குளிர்; பொதுமக்கள் தவிப்பு
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.
- குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
சேலம்:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. குறிப்பாக ஆத்தூர், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்த மழையால் வயல் வெளியில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்கனவே பெய்த மழையால் ஆத்தூர் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது மழையை தொடர்ந்து பனி மூட்டமும் நிலவுகிறது.
இதனால் சேலம் மற்றும் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் காலை நேரத்தில் சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு செல்கின்றனர். இந்த குளிரால் இரவு பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து நிலவி வரும் கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.