உள்ளூர் செய்திகள்

எடப்பாடி அடுத்த ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி. 

எடப்பாடி அருகே பால தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-06-08 13:05 IST   |   Update On 2023-06-08 13:05:00 IST
  • எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது.
  • இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் காட்டூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பாலதண்டாயுதபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. சுற்றுப்புற பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமான இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக கல்வடங்கம் காவிரி நதிக்கரையில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள், பாலதண்டாயுதபாணி சாமி கோவில் சன்னதியில் சமர்ப்பித்தனர். தொடர்ந்து கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, நாடி சந்தானம், பூர்ணாஹுதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக வேள்விகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரம் முழங்க, இன்று காலை கோபுர கலசங்களில் புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் முழங்க முருகப்பெ ருமானை வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடு களை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

Similar News