உள்ளூர் செய்திகள்

அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற யாக பூஜை வழிபாடு.

பேளூர் அங்காளம்மன் கோயிலுக்கு புதிய கொடிமரம்

Published On 2023-07-01 09:58 IST   |   Update On 2023-07-01 09:58:00 IST
  • பேளூரில் வசிஷ்டநதி கரையிலுள்ள 1000 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலில் இருந்த கொடி மரம் பழுதானது.
  • கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, 100 ஆண்டுகள் முதிர்ந்த மருத்துவ குணம் கொண்ட வேங்கை மரத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கொடி மரம் செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

வாழப்பாடி:

வாழப்பாடி அடுத்த பேளூர் பழமைக்கும் தொன்மைக்கும் இன்றளவும் சான்றாக விளங்கி வருகிறது. பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் காணப்படும் ஆதித்த கரிகாலன் காலத்திய கல்வெட்டும், பேளூர் அங்காளம்மன் கோயிலில் காணப்படும் முதலாம் பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டும், தனியார் விவசாய நிலத்தில் காணப்படும் நாயக்கர் கால மூக்கறுப்பு போர் கல்வெட்டும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

பேளூரில் வசிஷ்டநதி கரையிலுள்ள 1000 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலில் இருந்த கொடி மரம் பழுதானது. இதையடுத்து, கேரள மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, 100 ஆண்டுகள் முதிர்ந்த மருத்துவ குணம் கொண்ட வேங்கை மரத்தில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கொடி மரம் செதுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு யாக பூஜை வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண் டனர். வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவரான அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாக்குழுவினர் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

Tags:    

Similar News