உள்ளூர் செய்திகள்

பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2022-09-22 07:03 GMT   |   Update On 2022-09-22 07:03 GMT
  • பெண்ணாடம் அருகே வீட்டில் பதுக்கிய ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
  • சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.

கடலூர்.

பெண்ணாடம் அருகே, எடையூர் புதுகாலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளி. இவருக்கு அதே பகுதியில் காமராஜர் தெரு வில் பழைய ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம், ஏட்டு ராஜசேகர் ஆகியோர்சோதனை செய்தனர்.

அப்போது, ராமச்சந்திரன்வீட்டில் 30 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 2,500 கிலோ எடையிலான ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் உதவி ஆய்வாளர் கவியரசுவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திரனிடம விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News