உள்ளூர் செய்திகள் (District)

மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Published On 2022-07-28 10:06 GMT   |   Update On 2022-07-28 10:06 GMT
  • பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று போட்டோவுடன் கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • ஒரிஜினல் கொண்டு வரவும் சரி பார்த்து விட்டு திரும்பி தரப்படும்.

பூதலூர் :

தஞ்சாவூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் திருச்செனம்பூண்டி தியாக இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

48-வது இளையோர் சிறுமியர்களுக்கான தமிழ்நாடு மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 5.8.2022 முதல் 7.8.2022 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

இதில் பங்குகொள்ளும் இளையோர், சிறுமியரின் வயது 4.9.2022 அன்றோ (அல்லது) அதற்கு பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 65 கிலோ அல்லது அதற்குள் இருக்க வேண்டும். அதேபோல, இளையோருக்கான 48-வது தமிழ்நாடு மாநில அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி 19.8.2022 முதல் 21.8.2022 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இதில் பங்குகொள்ளும் இளையோர் சிறுவர்களுக்கான வயது 20.11.2022 அன்றோ (அல்லது) அதற்கு பின்போ 20 வயதிற்குள் இருக்க வேண்டும். எடை 70 கிலோ அல்லது அதற்குள் இருக்க வேண்டும்.

இப்போட்டிகளுக்கான தஞ்சை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர், சிறுமியர் ஆதார் கார்டு, பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவைகளில் ஏதேனும் ஒன்று போட்டோவுடன் கட்டாயமாக இருக்க வேண்டும்.

இவைகளில் ஒன்று ஒரிஜினல் கொண்டு வரவும் சரி பார்த்து விட்டு திரும்பி தரப்படும். போனபைட் சான்றிதழ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News