உள்ளூர் செய்திகள்

பாலின சமத்துவத்தை உணர்த்தும் கடவுளாக சிவன் உள்ளார்-ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

Published On 2023-02-19 09:26 GMT   |   Update On 2023-02-19 09:26 GMT
  • தட்சிண கைலாயம் என புகழப்படும் வெள்ளியங்கிரி மலையடி–வாரத்தில் ஆதியோகியை தரிசிக்கிறேன்.
  • மக்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கும் யோகியாக இருக்கிறார்.

கோவை,

கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சிவனை நினைக்கும் போதே நமக்குள் சக்தி ஊற்ெறடுக்கும். தட்சிண கைலாயம் என புகழப்படும் வெள்ளியங்கிரி மலையடி–வாரத்தில் ஆதியோகியை தரிசிக்கிறேன்.

பார்வதி தேவிக்கு தனது உடலில் பாதியை தந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் சிவன் பாலின சமத்துவத்தை உணர்த்தும் கடவுளாக இருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆண்மை, பெண்மையின் சமத்துவ பக்கத்தை அவர் உணர்த்துகிறார். உலகின் பல்வேறு கலாசாரங்களும், பக்தி, ஞானம் யோகத்தின் பாதை பற்றி பேசுகின்றன. சிவன் மட்டுமே இவை அனைத்துக்கும் மூர்த்தியாக உள்ளார்.

சிவன் நம்மைப் போல குடும்பஸ்தனாகவும், அதே சமயம் சன்னியாசியாகவும் உள்ளார். அவரே முதல் ஞானி, அவரே முதல் யோகி, கருணாமூர்த்தியாக விளங்கும் அவரே ஆக்ரோ–ஷமான ருத்ரனாகவும் இருக்கிறார்.

மகா சிவராத்திரியானது அறியாமை எனும் இருளின் முடிவாகவும், ஞானப்பா–தையின் திறப்பாகவும் இருக்கிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்ட–வர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சத்குரு நவீன காலத்தின் போற்றத்தக்க யோகியாக உள்ளார். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கும் யோகியாக இருக்கிறார். இந்த சிவராத்திரி நன்னாள், நம் ஒவ்வொரு நாளையும் பிரகாச மானதாக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் சத்குரு பேசியதாவது:-

மனித உடலுக்கு சக்தியானது பொதுவாக உணவு வாயிலாக 60 முதல் 70 சதவீதம் வரையும், சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவை வாயிலாக 30 முதல் 40 சதவீதம் வரை கிடைக்கிறது. இதை தலைகீழாக மாற்ற வேண்டும்.

அதாவது உணவு வாயிலாக 30 முதல் 40 சதவீதமும், இதர சக்தி இயற்கை வழியிலும் பெற வேண்டும். அப்படி இருந்தால் எப்போதும் சந்தோஷமாகவும், பர–வசத்துடனும் இருக்கலாம்.

ஹார்டுவர்டு மருத்துவ பல்லைக்கழகத்துடன் இணைந்து நாம் சில ஆய்வு மேற்கொண்டோம். அதில் நம் மரபணு மாற்றங்களுக்கு மூளையில் சுரக்கும் சில வேதி மாற்றங்கள், நரம்பியல் மாற்றங்கள் தான் காரணம் என தெரியவந்துள்ளது.

கருவில் இருக்கும் குழந்தையின் செ யல்பா ட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் இசைக்கு உண்டு. எனவே நல்ல இசையை கேளுங்குள். அதற்கு இசை ஞானம் இருக்க வேண்டும் என்பதில்லை. நல்ல இசையாக இருந்தால் போதும்.இவ்வாறு அவர் பேசினார். விழாவில் மத்திய மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி துணை முதல்-அமைச்சர் நமச்சிவாயம், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நடிகைகள் கங்கனா, தமன்னா, ஜூஹி சாவ்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News