சீர்காழி சாட்டை வாய்க்காலில் நகர்மன்ற தலைவர் திடீர் ஆய்வு
- மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
- சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 3-வது வார்டில் பூந்தோட்ட தெருவில் சாட்டை வாய்க்கால் அமைந்துள்ளது.
இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்ப டாமல் இருந்து வருகிறது.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
சாட்டை வாய்க்காலை ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வார வேண்டுமென தொடர்ந்து அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து 3 -வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரிபாய்செந்தில் சீர்காழி நகராட்சி ஆணையர் ஹேமலதாவிடம் சாட்டை வாக்காளர் தூர்வாரக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் சாட்டை வாய்க்காலை நேரடியாக சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விரைவில் வாய்க்காலை தூர்வாரி தருவதாக உறுதியளித்தனர்.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து நகராட்சி ஆணையருக்கும், நகர மன்ற உறுப்பினருக்கும் நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மேம்பாட்டுக் குழு துணை அமைப்பாளர் செந்தில் உடனிருந்தார்.