உள்ளூர் செய்திகள்
காரைக்குடி பள்ளியில் ரத்ததான முகாம்
- செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் ரத்ததான முகாம்
- பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார்.
காரைக்குடி
செல்லப்பன் வித்யா மந்திர் இண்டர்நேஷனல் பள்ளி மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கம் இணைந்து ரத்ததான முகாமை பள்ளி வளாகத்தில் நடத்தியது. பள்ளியின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்யன் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் ராஜேஸ்வரி, முதல்வர் வாணிபோஜன் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்துறை தலைவர் ஜான் போஸ்கோ வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் பெரியண்ணன் முகாமை தொடங்கி வைத்தார்.
ரோட்டரி சங்க தலைவர் சத்குரு தேவன், அரசு மருத்துவமனை ரத்த வங்கி இயக்குநர் அருள்தாஸ், ரோட்டரி சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவிகள் பிரபாஷினி, ஸ்ரீசவுந்தரி ஆகியோர் ரத்ததானம் பற்றி பேசினர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர். தலைமையாசிரியர் மீரா நன்றி கூறினார்.