உள்ளூர் செய்திகள்

தொழில் முனைவோர் கருத்தரங்கம்

Published On 2023-06-28 14:47 IST   |   Update On 2023-06-28 14:47:00 IST
  • வருகிற 30-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
  • தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் மற்றும் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 5.30 மணிக்கும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின், ஒருங்கி ணைந்த கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதில் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவ லர்கள் விளக்கி பேசுவர். எனவே ஆர்வமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.

அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தி னர் தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News