உள்ளூர் செய்திகள் (District)

கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-02 09:27 GMT   |   Update On 2022-09-02 09:27 GMT
  • இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
  • இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

சிவகங்கை 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள இளையாத்தங்குடியில் கைலாசநாதர் சமேத நித்திய கல்யாணி கோவில் 7 குளங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. நகரத்தார்களின் 9 கோவில்களில் முக்கியமானது இளையாத்தங்குடி கைலாசநாதர் கோவில் ஆகும். இந்த கோவிலில் 18 வருடங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதம் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தன. இதையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் 3 காலபூஜைகளும் பூர்ணாகுதியும் நடந்தது.

பிள்ளையார்பட்டி பிச்சைகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் புனிதநீர் நிரம்பிய குடத்தை சுமந்து வந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் இருந்து புறப்பட்டு கோபுரங்களை அடைந்தனர். பின்னர் கோபுரகலசங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மற்றும் பிரமுகர்கள், சுற்றுபுற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்த கோவில் கட்டப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை 5 முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News