உள்ளூர் செய்திகள்

உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள்.

குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம்

Published On 2023-02-08 13:13 IST   |   Update On 2023-02-08 13:13:00 IST
  • இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
  • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய், மகளை கொலை செய்து 60 நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து தப்பினர்.

இரட்டை கொலை நடந்து 27 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு இரவுசேரி நாடு, தென்னிலைநாடு உட்பட 14 நாட்டார்கள் முன்னிலையில் நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக், த.மா.கா மாநில செயலாளர் இருமதி துரைகருணாநிதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரதம் இருந்தனர்.

உண்ணாவிரத்தை முடித்து கொண்ட காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், இந்த வழக்கு சம்பந்தமாக கூடுதலாக ஒரு மாதத்திற்குள் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் அடுத்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறும்.

ஒரு மாத காலத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தேவகோட்டை துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News