உள்ளூர் செய்திகள்

நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

பல கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் திட்டம்-நகர்மன்ற தலைவர் தகவல்

Published On 2023-11-25 15:07 IST   |   Update On 2023-11-25 15:07:00 IST
  • மானாமதுரையில் பல கோடி ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • இந்த தகவலை நகர்மன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை

மானாமதுரை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவர் பாலசுந்தரம், ஆணையாளர் ரெங்கநாயகி, துப்புரவு ஆய் வாளர் பாண்டிச் செல்வம் மற்றும் வார்டு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறை வேற்றப்பட வேண்டிய தீர்மா னங்கள் வாசிக்கப் பட்டு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் தெய் வேந்திரன் மானாமதுரையில் பிரதான சாலைகளில் உள்ள மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டுள்ளது.

இவை ஏன் வெட்டப் பட் டது? இதற்கு யார் காரணம் என்றார். இதற்கு பதிலளித்த தலைவர், இதற்கும், நகராட்சிக்கும் சம்பந்தமில்லை. நெடுஞ்சாலை துறை நிர்வா கம்தான் மரங்களை வெட்டியது என்றார்.

தி.மு.க. உறுப்பினர் இந்து மதி திருமுருகன் பேசியதாவது:-

கூடுதலாக தெருவிளக்குகள் கேட்டு இதுவரை தரப்படவில்லை தீர்மானம் மட்டுமே நிறைவேற்றபடு கிறது. கொசுமருந்து அடிக்கவில்லை. இதற்கு பதிலளித்த தலைவர், கொசுமருந்து அடிக்க வரும்போது இனி வரும் நாட்களில் கண்டிப்பாக உறுப்பினர்களிடம் தெரிவிக்கப்படும்.

தி.மு.க. உறுப்பினர் சதிஷ் பேசுகையில், நகராட் சியில் 27 வார்டுகள் உள்ளது.எந்த திட்டம் தொடங்கினாலும் முதல் வார்டு அல்லது கடைசி வார்டில் தொடங்கபடுகிறது. நடுவில் உள்ள எனது வார்டையும் கவனிக்க வேண்டும். எனது வார்டில் அப்பன் பெருமாள் கோவில் அருகே பள்ளிகள் உள்ளது. இங்கு கழிவுநீர் கால்வாய் உள்ளது. இதனை ஆய்வு செய்தும் இன்னும் மூடப்படவில்லை என பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய உறுப்பினர்கள், மானாமதுரை நகரில் விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடை களை கட்டுப்படுத்த வேண் டும் என்றார்.

இதற்கு பதில் அளித்த தலைவர் மாரியப்பன் கென்னடி, மானாமதுரை நகரில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கவும், ஏலம் விடவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் கழிவுநீர் கால்வாய் புதிதாக அமைக்க பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

Tags:    

Similar News