உள்ளூர் செய்திகள்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ரவி கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

குடியரசு தின கொண்டாட்டம்

Published On 2023-01-28 12:30 IST   |   Update On 2023-01-28 12:30:00 IST
  • காரைக்குடியில் குடியரசு தின கொண்டாட்டப்பட்டது.
  • லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

காரைக்குடி

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் குடியரசு தின விழா நடந்தது. துணைவேந்தர் ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவர் படை மற்றும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு பள்ளியின் கல்வி இயக்குநர் டாக்டர் ராஜேசுவரி தலைமை தாங்கினார். தலைமை ஒருஙகிணைப்பாளர் சிவகாமி முத்துகருப்பன் வரவேற்றார். அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் வைரவசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி யேற்றினார். தாளாளர் சத்தியன் வாழ்த்து தெரிவித்தார்.

புதுவயல் வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் குமார் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் தேசிய கொடியை ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் முதல்வர் உஷாகுமாரி வரவேற்றார்.

சேர்மன் குமரேசன் தலைமை தாங்கினார்.துணை சேர்மன் அருண்குமார் முன்னிலை வகித்தார்.லெப்டினண்ட் கமாண்டர் பெல்லியப்பா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

காரைக்குடி முத்துப்பட்டினம் சரசுவதி ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியை மீனா கொடியேற்றி பேசினார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

பொறியாளர் கோவிந்த ராஜ், துணை பொறியாளர் சீமா, நகர்நல அலுவலர் டாக்டர் திவ்யா, கவுன் சிலர்கள், நகராட்சி அலுவலர்கள், சுகா தார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News