உள்ளூர் செய்திகள்

வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல்

Published On 2022-09-11 13:42 IST   |   Update On 2022-09-11 13:42:00 IST
  • வரி பாக்கி செலுத்தாத நிறுவனங்களுக்கு சீல் நகரசபை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

சிவகங்கை

மாவட்ட தலைநகராக இருக்கும் சிவகங்கை 27 வார்டுகளை கொண்ட நகராட்சியாக உள்ளது. இங்கு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று நகராட்சி தலைவராக சிவகங்கை தி.மு.க. செயலாளர் துரைஆனந்த் தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது சிவகங்கை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.

நகராட்சி நிர்வாகத்திற்கு தொழில், குடிநீர், பாதாள சாக்கடை மற்றும் வீட்டு வரி பாக்கி, குத்தகை பாக்கி மட்டும் ரூ.5 கோடி நிலுவையில் உள்ளதால் நகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

இந்த வரி பாக்கிகளை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தாவிட்டால் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்றும், குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்போவதாகவும் தலைவர் தெரிவித்தார்.

மேலும் வரிப்பாக்கி உள்ளவர்களின் பெயர்களை நகராட்சி அலுவலக வாயிலில் பிளக்ஸ் பேனர்களாக வைக்க உள்ளதாகவும் நகரசபை தலைவர் தலைவர் துரைஆனந்த் தெரிவித்தார்.

Tags:    

Similar News