உள்ளூர் செய்திகள்

அங்காள ஈஸ்வரி கோவிலில் சிவராத்திரி திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

சிவகிரி அருகே அங்காள ஈஸ்வரி கோவிலில் சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்

Published On 2023-02-15 09:11 GMT   |   Update On 2023-02-15 09:11 GMT
  • சிவராத்திரி அன்று சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி நடைபெறுகிறது.
  • பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது.

சிவகிரி:

சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் உலக மாதா அங்காள ஈஸ்வரி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சிவராத்திரி அன்று காலை சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி நடைபெறுகிறது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் சேனைத் தலைவர் சமூக பொது நிர்வாகிகள், துணைச் செயலாளர் பாலசுப்ர மணியன், பொருளாளர் ராமராஜ், சமூக நிர்வாகிகள், தலைவர் உலகநாதன், செயலாளர் இரணவீறு, பொருளாளர் குருசாமி, துணைத் தலைவர் உலகநாதன், துணைச் செயலாளர் முருகன், துணை பொருளாளர் அருணாசலம், இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத் தலைவர் முருகதாசன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு விசேஷ பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுநாள் (வெள்ளிக்கி ழமை) இரவுகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாளின் சிவசக்தி குடம் சன்னதிக்கு கொண்டு வந்து பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் நான்கு கால பூஜையும், நள்ளிரவு 2 மணிக்கு மேல் பூ அலங்காரம், மின்மினி சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்மாள் உற்சவ மூர்த்தியாக அமர்ந்து வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி அதிகாலை 4 மணிக்குள் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பூஜைகள் நடைபெற்று ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்பாள் உற்சவ மூர்த்தியாக வீதிஉலா வந்து பாரிவேட்டை பூஜை நடைபெறுகிறது. திங்கள்கிழமை மஞ்சள் நீராடி, முளைப்பாரி எடுத்துச் செல்லப்படுகிறது. திருவிழாவில் நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

Tags:    

Similar News