உள்ளூர் செய்திகள்

பள்ளி நூற்றாண்டு மலரை சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட காட்சி.

தென்காசியில் பள்ளி நூற்றாண்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு

Published On 2023-02-26 14:13 IST   |   Update On 2023-02-26 14:13:00 IST
  • விழாவுக்கு கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
  • சபாநாயகர் அப்பாவு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவித்து, பள்ளி நூற்றாண்டு மலரை வெளியிட்டார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை யரங்கத்தில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு பள்ளிக்கு நிலம் மற்றும் அரங்கம் அளித்த நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து கவுரவித்து, பள்ளி நூற்றாண்டு மலரை வெளியிட்டார். முதல் பிரதியை மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் பெற்றுக் கொண் டார்.

நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

1930-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்திற்குத் ராவ் பகதூர் ஈசுவரன் பிள்ளை தலைவரானார். தென்காசி போர்டு உயர்நிலைப் பள்ளிக்கு சிறந்த கட்டிடம் ஒன்று கட்டவேண்டுமென்று நினைத்தார். அதற்காக பொதுமக்களை அழைத்து பேசி, சமாதான முறையிலேயே இன்றுள்ள பள்ளிக் கூடத்தை சுற்றியுள்ள 20 ஏக்கர் நிலத்தை வாங்கி வழங்கினார்.

தற்காலிகமாக 1934-ல் ஒரு கட்டிடத்தையும் கட்டித் தந்தார். தண்ணீர் வசதிக்காக இப்பொழுதுள்ள கிணற்றையும் வெட்டித் தந்தார். ஈஸ்வரன் பிள்ளை அவர்களின் மருமகனான சிதம்பரம் தன் மாமனாரைப் போல வள்ளலாகவே வாழ்ந்து காட்டியவர். ஆன்மீகம், கல்வி, ஏழை களுக்கு உதவுதல், பசியால் வாடுகிறவர்களுக்கு தினந்தோறும் வீட்டில் வாழை இலை விருந்து படைத்த வருமாவார் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பல்வேறு சமூகப் பணியும் ஆற்றியவர்.

கேடில் விழுச்செல்வ மாகிய கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வளவு பெரிய மைதானத்தை இப்பள்ளிக்கு வழங்கி பல லட்சக்கணக்கான மாணவர்களிடத்தில் அறிவெனும் தீபமேற்றி அவர்கள் வாழ்வில் வெற்றி நடை போட காரணமாக இருந்த ராவ்பகதூர் இ.சி.ஈஸ்வரன் பிள்ளை புகழ் உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும் என்று கூறி அன்னாரின் பெயரில் செயல்படும் இந்த பள்ளியானது நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்நன்னாளில், இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவச் செல்வங்கள், தற்போது பணியாற்றும் தலைமை யாசிரியர், இருபால் ஆசிரியர்கள் அனைவரையும் வாழ்த்தி இப்பள்ளி மேலும் பல சாதனைகளைப் படைத்து கல்வியில் சிகரம் தொட்டு சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் செந்தூர் பாண்டி வரவேற்றார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ராஜா (சங்கரன் கோவில்), தி.சதன் திருமலைக்கு குமார் (வாசு தேவநல்லூர்) தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் பொ. சிவ பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் தாமஸ் தனராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், முன்னாள் ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News