உள்ளூர் செய்திகள்
மாநில சிலம்ப போட்டியில் சாதனை படைத்த வீரர் வீராங்கனைகள்.
மாநில அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கு பாராட்டு
- திண்டுக்கல் மாவட்டம் ராஜகாப்பட்டியில் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி பல்வேறு பிரிவினருக்கு நடந்தது.
- மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் ராஜகாப்பட்டியில் எஸ்.வி.எம். சிலம்பம் தற்காப்பு கலை அகாடமி சார்பாக மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி பல்வேறு பிரிவினருக்கு நடந்தது.
மாநிலம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளின் முடிவில் நத்தம் அய்யனார்புரம் சர்வ சேவா ஸ்பேரோஸ் நெஸ்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
பள்ளி செயலாளர் வசந்தா, முதல்வர் சண்முககுமார் போட்டிக்கான ஏற்பாடுகளை சிலம்ப பயிற்சியாளர் சங்கர் செய்திருந்தனர்.