உள்ளூர் செய்திகள்
ஆரணி ஆற்றின் குறுக்கே குழாய் பதிக்கும் பணி நிறுத்தம்
- கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுந்தரையாஸ் தெரு சாலை சேதம் அடைந்தது.
- ஆற்றின் கரையோரம் இருந்த 2 மின் கம்பம் சாய்ந்தன.
பொன்னேரி:
பொன்னேரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் பிரதான 5 நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்கள் ஆரணி ஆற்றின் குறுக்கே நவீன தொழில்நுட்ப உதவியுடன் ராட்சத துளையிடும் எந்திரத்தின் மூலம் 250 மீட்டர் நீளம் 10 மீட்டர் ஆழத்தில் துளையிடும் பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையில் சுந்தரையாஸ் தெரு சாலை சேதம் அடைந்தது. மேலும் ஆற்றின் கரையோரம் இருந்த 2 மின் கம்பம் சாய்ந்தன. சேதம் அடைந்த சாலை அருகே எந்திரம் உள்ளதால் ஆரணி ஆற்றின் குறுக்கே குழாய் பதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.