உள்ளூர் செய்திகள் (District)

போலீசாரால் கைது செய்யப்பட்ட பெட்டிக் கடைக்காரரை படத்தில் காணலாம்.

புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Published On 2023-09-10 07:52 GMT   |   Update On 2023-09-10 07:52 GMT
  • போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகர் உள்ளிட்ட போலீசார் தகடி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் மணி கண்டன் (வயது 38) என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து 10 கிலோ அளவிலான புகையிலை பொருட்களை கைப்பற்றிய போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறுகையில், கள்ள க்குறிச்சி மாவட்டத்தில் தமிழக அ ரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News