உள்ளூர் செய்திகள்

 கட்டுமான பணிகளை சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

மாணவிகள் விடுதி கட்டுமான பணி ஆய்வு

Published On 2022-08-12 10:20 GMT   |   Update On 2022-08-12 10:20 GMT
  • அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
  • இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி வளாகத்தில் அரசு ஆதிதிராவிடர் நல 50 கல்லூரி மாணவிகள் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.126.09 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார். சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில் உறுப்பினர்கள் முத்துராமலிங்கம், கிருஷ்ணசாமி , தமிழரசி, தளபதி, நாகை மாலி, நிவேதா முருகன், பாலாஜி, ஜெயக்குமார் மற்றும் குழுவினர் மாணவிகள் விடுதியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.

இந்த கட்டுமான பணியை ஒப்பந்தம் எடுத்தவரிடம் பணிகள் எவ்வளவு காலத்தில் முடிக்கப்படும்? தரமான முறையில் நடந்து வருகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டு அறிந்தனர்.

அப்போது குறிப்பிட்ட காலத்திற்குள் தரமான அளவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து அந்த குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்து கிடங்கு, நாஞ்சிக்கோட்டை துணை மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News