உள்ளூர் செய்திகள்

வளசரவாக்கத்தில் கல்லூரி மாணவரை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

Published On 2022-08-30 14:55 IST   |   Update On 2022-08-30 14:55:00 IST
  • உதவி செய்வது போல் நடித்த 4 பேர் கும்பல் அத்வைத் மற்றும் சஞ்சயை பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்றது.
  • கல்லூரி மாணவர்களை மிரட்டி ரூ.3ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் “இயர் பேட்” ஆகியவற்றை பறித்து 4 பேர் கும்பல் தப்பி சென்றுவிட்டது.

சென்னை:

சென்னை, தி.நகர் பகுதியை சேர்ந்தவர் அத்வைத். தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர் சஞ்சய் கல்லூரி மாணவர். இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு ஆலப்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பெட்ரோல் இல்லாமல் மோட்டார் சைக்கிள் நின்றுவிட்டது.

அப்போது உதவி செய்வது போல் நடித்த 4 பேர் கும்பல் அத்வைத் மற்றும் சஞ்சயை பாழடைந்த கட்டிடத்திற்குள் கடத்தி சென்று மிரட்டி ரூ.3ஆயிரம் ரொக்கம், விலை உயர்ந்த வாட்ச், மற்றும் "இயர் பேட்" ஆகியவற்றை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தினார். இந்த வழிப்பறி தொடர்பாக மதுரவாயல் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, திருவேற்காட்டை சேர்ந்த சதிஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News