உள்ளூர் செய்திகள்
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உற்சாக வரவேற்போடு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
- எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கவும், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடியது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன் முறையாக செயற்குழு கூடி உள்ளது.
அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் உற்சாக வரவேற்போடு இதில் கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அங்கீகாரம் வழங்கவும், கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.