காஞ்சிபுரத்தில் மாணவ-மாணவிகளுக்கு கலைப் போட்டி 17-ந்தேதி நடக்கிறது
- பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.
- போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஓரிக்கையில், சதாவரம் பகுதியில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் அரசு காதுகோளாதோர் பள்ளி அருகில் வருகிற 17-ந்தேதி (சனிக்கிழமை) 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.
தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடன போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும். ஓவியப் போட்டிக்கு ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும்.
ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மண்டல உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம் மற்றும் தொலைபேசி எண். 044-2729148 அல்லது 8015136911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.