உள்ளூர் செய்திகள்

முதியோர் ஓய்வூதியம் வழங்க கோரிக்கை

Published On 2022-11-15 15:16 IST   |   Update On 2022-11-15 15:16:00 IST
  • ஜெகநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
  • பெண்கள் தங்களுக்கு 4 மாதமாக முதியோர் ஓய்வூதியம் இன்னும் வரவில்லை.

சோழவரம் அடுத்த ஜெகநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 120 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வகுப்பறைகள் மட்டும் உள்ளதால் கூடுதல் வகுப்பறைகள் கேட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இதனை ஆய்வு செய்ய பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் வந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு 4 மாதமாக முதியோர் ஓய்வூதியம் இன்னும் வரவில்லை. அதனை பெற்றுத்தரவேண்டும் என்று துரைசந்திரசேகர் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. தெரிவித்தார். அப்போது ஊராட்சி தலைவர் மணிகண்டன் உடன் இருந்தார்.

Similar News