ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்தது: குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி
- நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து நேற்றைய நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்து வந்த நிலையில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 20 ஆயிரம் கனடியாக நீர் வரத்து குறைந்து உள்ளது.
- சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து 15-வது நாளாக இருந்து வந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது.
ஒகேனக்கல்:
தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. கடந்த 20-ம் தேதி வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 21-ம் தேதி மாலை வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.
இந்த நீர் வரத்தால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரையை தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்குவதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. மேலும் நீர் வரத்தானது படிப்படியாக குறைந்து நேற்றைய நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து இருந்து வந்த நிலையில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி 20 ஆயிரம் கனடியாக நீர் வரத்து குறைந்து உள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் ஆற்று பகுதியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் தொடர்ந்து 15-வது நாளாக இருந்து வந்த தடையை மாவட்ட நிர்வாகம் நீக்கியது.
இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.