
மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சில தினங்களாக நீர் வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் பெய்த கோடை மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு 2,200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி மற்றும் சினிபால்ஸ், ஐவர்பாணி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
விடுமுறை தினமான இன்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நீர்வரத்தை அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.