உள்ளூர் செய்திகள்
- கொசு அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
- குப்பைகளை அகற்றி வயல்களில், தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
பொன்னேரியை அடுத்த கம்மார் பாளையம் ஊராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தெருக்கள் மற்றும் வயல்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் உள்ளது. இதனால் கொசு அதிகம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஊராட்சித் தலைவர் இளஞ்செல்வி பார்த்திபன் தலைமையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் எந்திரத்தின் மூலம் தெருக்கள்முழுவதும் கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றி வயல்களில், தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.