உள்ளூர் செய்திகள்

கம்பம் அருகே காதல் திருமணம் செய்த வியாபாரி மர்ம மரணம்

Published On 2023-09-05 12:16 IST   |   Update On 2023-09-05 12:16:00 IST
  • முருகனின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
  • அன்னூர் போலீசார் முருகனின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர்.

கம்பம்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது36). இவர் கோவை மாவட்டம் அன்னூரில் இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

இவர் கவிதா (35) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கவிதா தனது உறவினர்களுக்கு தெரிவித்தார்.

அதன்பேரில் அவரது உடல் அன்னூரில் இருந்து சாமாண்டிபுரத்துக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் முருகனின் தந்தை தனது மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து அன்னூர் போலீசார் முருகனின் உடலை தோண்டி எடுத்து உடல்கூறாய்வு செய்ய முடிவு செய்தனர். இதற்காக அன்னூர் போலீசார் கம்பத்திற்கு வந்து அவரது உடலை தோண்டி எடுக்க தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனு கொடுத்தனர். மேலும் உத்தமபாளையம் தாசில்தாரிடமும் மனு அளிக்கப்பட்டது.

அன்னூர் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ்வரன் தலைமையில் உத்தமபாளையம் வட்டாட்சியர் மேற்பார்வையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் இன்று முருகனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முருகனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News